100 ஐ.எஸ் தீவிரவாதிகள் சரண்

சிரியாவின் ரக்கா நகரை கைப்பற்றுவதற்கு சிரிய இராணுவம் நடத்திவரும் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 100 ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அந்த நாட்டில் ஆயுதப் புரட்சி ஆரம்பமானதில், சில ஆயுதக் குழுக்கள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை, ஐ.எஸ் தீவிரவாதிகள் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த உள்நாட்டு யுத்தத்தினால் சுமார் 03 லட்சம் மக்கள் இதுவரையில் பலியாகியுள்ளதுடன், 11 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும்நிலையில், அவர்களை அங்கிருந்து அகற்றும் பொருட்டு சிரிய அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் வான் படைகள் தாக்குதலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அந்த நகரின் அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் சிரியா இராணுவம் உச்சகட்ட தாக்குதலை நடத்திவரும் நிலையில், நேற்றைய தினம் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குர்திஷ் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு