இலங்கை வீரர்களின் கோரிக்கை

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தப்படவுள்ள 3ஆவது 20க்கு20 போட்டியை வேறு நாட்டில் நடத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை உள்ளடங்கி 40 கிரிக்கெட் வீரர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கோரிக்கைக் கடிதம் தொடர்பில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிர்வாக குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணியினர் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்ததில், இலங்கை அணி வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். குறித்த தாக்குதலின் பின்னர் சர்வதேச அணிகள், பாகிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்க மறுப்பு தெரிவித்த நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூரில், இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 20க்கு20 போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு