வட, கிழக்கு இணைப்புத் தொடர்பில் அலட்டிக்கொள்ளப் போவதில்லை

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாதென அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், வட, கிழக்கு இணைக்கப்பட வேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் மாறாது எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு