எதிர்காலத்தைப் பாதுகாக்க தன்னம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

இளைய சமூகத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ளும் செயற்றிட்டங்களை வகுத்து அவற்றை முன்கொண்டு செல்வதே தமது கட்சியின் நிலைப்பாடாகுமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், இளைய சமூகத்தினர் தமது எதிர்காலம் தொடர்பில் ஒருபோதும் நம்பிக்கை இழந்துவிடாது, நம்பிக்கையுடன் சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து அவற்றை வெற்றி கொள்வதற்கான மனோநிலையை வளர்த்தெடுக்கும் போதுதான் எதிர்காலத்தை பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு