அரச தனியார் பொருளாதார மாதிரி அவசியமில்லை

நாட்டில் அதிவேக வீதிகளை நிர்மாணிப்பதற்காக அரச தனியார் பொருளாதார மாதிரி அவசியம் இல்லையென அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே டைம்ஸ் பத்திரிகையில் நாமினி விஜேதாஸ அது தொடர்பில் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாட்டில் அதிவேக வீதிகளை அமைக்கும் போது அரச மற்றும் தனியார் பிரிவு இணைந்த பொருளாதார மாதிரியொன்றின் அவசியம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தமைக்கு அமைவாக, இறுதி தீர்மானத்திற்கு செல்ல முன்னர், குழுவொன்றை நியமித்து சிபாரிசுகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென பொருளாதார முகாமைத்துவ அமைச்சரவை உபகுழுவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தியின் போது கிடைக்கும் வருமானம், நிர்வாக செலவு, மற்றும் அடுத்த 10 வருட காலத்திற்கான வீதி கண்காணிப்பிற்கு அவசியமான செலவுகள் தொடர்பிலான அறிக்கையை தயாரிப்பது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட 06 உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் பொறுப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் தொடர்பில் அரச தனியார் ஒன்றிணைந்த பொருளாதார மாதிரிக்கான முன்னெடுப்பு அவசியம் இல்லையெனவும், அதிவேக வீதிகளின் முதலீட்டுக்காக இலங்கை வங்கியுடன் அவ்வாறான பொருளாதார மாதிரியுடன் செயற்பட முடியும் எனவும் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் அடுத்த 10 வருடங்களில் பெருந்தெருக்கள் மூலம் பாரிய அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு