மலையகத்தில் இம்முறை கறுப்பு தீபாவளி

தீபாவளி முற்பணம் குறைக்கப்பட்டதால் இம்முறை தீபாவளி பண்டிகையை கறுப்பு தீபாவளியாக கொண்டாட நேரிட்டுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்த 3500 ரூபா தீபாவளி முற்பணம் இம்முறை வழங்கப்படவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி பண்டிகை கால முற்பணத்தை 3500 ரூபாவால் அதிகரிப்பதற்கு 2015ஆம் ஆண்டு அரசாங்கம் தீர்மானித்தமைக்கு அமைவாக, ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 6500 ரூபாவிற்கு மேலதிகமாக 3500 ரூபா சேர்க்கப்பட்டு, மொத்தமாக 10,000 ரூபா வழங்கப்படுவதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அறிவித்திருந்தது.

இந்த மேலதிக கொடுப்பனவு கடன் அடிப்படையில் வழங்கப்படுகின்ற போதிலும், மேலதிகமாக வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட 3,500 ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையென பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு