உடல்நிலை மோசமடைந்த நிலையில் அரசியல் கைதிகள்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று பேரில் இருவருக்கு சிறைச்சாலை வைத்தியர்களால் சேலைன் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளதுடன், மூன்று அரசியல் கைதிகள் தொடர்பிலும் வைத்தியர்கள் தொடர் கண்காணிப்பிலுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் 22ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் விஷேட மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேசங்களுக்கு மாற்றுமாறு வலியுறுத்தி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு