காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் 200 நாட்களுக்கும் மேலாக வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் இன்று 223ஆம் நாளாக மேற்கொள்ளப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 239ஆம் நாளாவும், வவுனியாவில் 235ஆம் நாளாகவும், கிழக்கு மாகாணத்தில் 226ஆம் நாளாகவும், மருதங்கேணியில் 223ஆம் நாளாகவும் இரவு பகலாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற போதிலும், தங்களுக்கு இன்னும் உரிய தீர்வு வழங்கப்படவில்லையென காணாமல் போனோரின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு