18 மாவட்டங்கள் வரட்சியால் பாதிப்பு

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்தாலும் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இன்னும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வரட்சி நிலைமை காரணமாக 5 இலட்சத்து 530 குடும்பங்களைச் சேர்ந்த 17 இலட்சத்து 5 ஆயிரத்து 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்ட மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவற்றில் அதிக பாதிப்புகளை புத்தளம் மாவட்டம் எதிர்கொண்டுள்ளதாகவும், அங்கு 87 ஆயிரத்து 145 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 88 ஆயிரத்து 784 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு