நான் சம்பந்தப்பட்டு வெளியான செய்தியில் உண்மையில்லை – மஹிந்த அமரவீர

ஹம்பாந்தோட்டை போராட்டத்துடன் தொடர்புடையவர்களை விடுவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, தான்னால் நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக, வெளியான தகவலில் உண்மையில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களை சந்தித்த அவர்கள் தம்மை விடுவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீதிமன்றத்திற்கு நான் கடிதம் எழுதியதாக குறிப்பிட்டதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அந்த கருத்து முற்றிலும் பொய்யானது எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவோ, அமைச்சராகவோ அல்லது சாதாரண பொது மகனாகவோ தான் நீதிமன்றத்திற்கு கடிதம் எதனையும் எழுதவில்லை எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனவே, இது குறித்து சட்டமா அதிபரிடம் முறைப்பாடு முன்வைக்கப்படவுள்ளதாகவும், தான் செய்யாத ஒன்றை செய்ததாக ஊடகங்கள் முன் தெரிவித்துள்ளமையானது, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதால், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு