07 கோடி மோசடி – முன்னாள் கணக்காய்வாளர் கைது

பேராதனை பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப் படிப்பு நிறுவனத்தின் 07 கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவான முன்னாள் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த அவர் நாடு திரும்பியபோது நேற்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கணக்காய்வாளர் 2004ஆம் ஆண்டு முதல் சூட்சுமமான முறையில் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு