கட்டுநாயக்கவில் ஓய்வெடுத்த நைஜர் ஜனாதிபதி

நைஜர் நாட்டு ஜனாதிபதி மொஹமட் இசோபு, சுமார் இரண்டு மணிநேரம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் தங்கியிருந்து, மீண்டும் பயணமாகியுள்ளார்.

இந்தோனேஷியாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில், நைஜர் ஜனாதிபதியும் பயணம் செய்துள்ள நிலையில், இன்று (17) அதிகாலை 3.20 மணியளவில், குறித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதன்பின்னர். அந்த விமானம் அதிகாலை 5.40 மணியளவில் இந்தோனேஷியாவுக்குப் பயணமானது.

நைஜர் நாட்டு ஜனாதிபதியுடன் அந்நாட்டு தூதுக் குழுவினரும் குறித்த விமானம் இந்தோனேஷியாவுக்குச் செல்வதற்கு ஆயத்தமாவதற்குள், கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள ஓய்வறையிலேயே தங்கியிருந்தனர். அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து அதே விமானத்தில் அவர்கள் இந்தேனேஷியாவுக்குப் பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு