ஹற்றன், நோர்வூட் பகுதியில் 910 கிராம் மாவா போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் விஷேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து மலையக பிரதேசத்திற்கு வருகின்ற இளைஞர்களை இலக்குவைத்து இந்த மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து நோர்வூட் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாவா போதைப்பொருள் தொடர்பாக விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.