மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்திருக்க வேண்டும் – ஜனாதிபதி வாழ்த்து

தீபத்திருநாளானது, அதனைக் கொண்டாடும் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் தனது இனிய தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனிதனின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லௌகீக வாழ்க்கைக்கும் ஒளியின் பங்கு மிக முக்கியமாக அமைகின்றது. அந்தவகையில், தீபாவளி தினத்தன்று இந்து பக்தர்களால் ஏற்றப்படும் தீப ஒளியானது, அவர்களது உள்ளங்களில் பிரகாசத்தை ஏற்படுத்துவதைப் போன்றே நம் நாட்டின் அனைத்து மக்களின் இதயங்களிலும் ஒளியேற்றி சகல இனங்களையும் ஒன்றிணைக்கும் ஒளிப்பாலமாக அது அமைய வேண்டுமென்பதே தனது பிரார்த்தனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒற்றுமை என்பது நமது நாட்டிற்கு மாத்திரமன்றி முழு உலகத்தினதும் இருப்புக்கு கட்டாயத் தேவையாக அமைந்துள்ள இன்றைய பொழுதில், இலங்கையர் என்ற வகையில் நாமும் இன, மதம் என பிரிவடைந்து காணப்படுவதற்கு பதிலாக சகவாழ்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆழமான பிணைப்புமிக்க புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட, இவ்வாறான கலாசார விழாக்கள் பெரும் ஆதாரமாக அமையுமென்பதே தனது எண்ணம் எனவும் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு