எழுத்துமூல அறிவிப்பின்றி வெளிநாடு செல்ல முடியாது

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள எந்தவொரு எம்.பியும் எழுத்துமூல அனுமதியின்றி, வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் அலரிமாளிகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற போதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது, மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் அடுத்த கட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விசாரணையில் பூரண ஒத்துழைப்பை வழங்குவது என்றும் தேவை ஏற்படின், தானே நேரில் சென்று சாட்சியமளிக்கத் தயார் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு