நேர அட்டவணையைப் பின்பற்றாத சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

அட்டவணையிடப்பட்ட நேரத்துக்கு, பயண இலக்கை அடையாத பஸ் சாரதிகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் ஜகத் பெரேரா, தெரிவித்துள்ளார்.

பஸ்களின் பயண இலக்கு சரியான நேரத்துக்கு பூர்த்தி செய்யப்படுவதில்லை என்பது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், பயணிகளை ஏற்றுவதற்காக, பஸ் சாரதிகள், ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்திலும், சுமார் 15 நிமிடத்துக்கு மேலாக நிறுத்தி வைப்பதாகத் தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு பஸ்ஸ{க்கும் ஆரம்ப நேரமும் பயண இலக்கை அடையும் நேரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு, பஸ் சாரதிகள், சாதாரண வேகத்துடன், பஸ்ஸை செலுத்தக்கூடியதாக உள்ளதாகவும் இதனடிப்படையில், குறிப்பிட்ட பயண இலக்கை, சரியான நேரத்தில் அடையாதவர்கள் தொடர்பில் கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்கள் சரியான நேரத்தில் இலக்கை அடைவதற்கு தவறுவார்களாயின், அவர்களுடைய மீள்பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும், பல பஸ்கள் சென்றடைந்த பின்னரே, மீண்டும் அவர்களுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறைகளை நேரத்தைக் கண்காணிப்பவர் அவதானிப்பார் என்றும் வீதி விசாரணை அதிகாரிகள் பலரும், பஸ் வழித்தடத்தில் நிறுத்தி வைக்கப்படவுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளதுடன், இந்தக் கட்டுப்பாடுகள், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் இரண்டுக்கும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பொதுமக்கள் முறைப்பாடுகளை செய்யவேண்டுமாயின், 115559595, 0112871353 மற்றும் 0112871354 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாட்டை பதிவு செய்யலாம் என்றும், இந்தக் கட்டுப்பாடுகள் தற்போது அமுலில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு