பிள்ளையார் சிலை உடைப்பு

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள ஓடுபாதையின் முன் வீதியில் பல வருடங்களாக அமைந்துள்ள பிள்ளையார் சிலை நேற்று (16) அடையாளம் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது.

கோவிலின் மேற்கூரையை உடைத்து பிள்ளையார் சிலையை வெளியில் எடுத்து சேதமாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தடவைகள் குறித்த கோவில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் மூன்றாவது முறையாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நாயாற்று வழி மற்றும் செம்மண்தீவு ஆகிய பகுதிகளிலும் நேற்றைய தினம் பிள்ளையார் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு