முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்கக் கோரி பிரதேச மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
11 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிக்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வாயிலை மறித்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இராணுவத்தின் 682ஆவது படைப்பிரிவின் தளபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த போது, மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதால் அவர் அங்கிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.