கடந்த வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீடு செலவிடப்படவில்லை

கடந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 792 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் செலவிடப்படவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கத்தின் கணக்காய்வாளர் நாயகம் நிதி தொடர்பான அறிக்கையில், நிதி பொறுப்புக்கூறல் தொடர்பில் சட்டங்களைப் புறந்தள்ளி முதற்தடவையாக அரசாங்கத்தின் துண்டு விழும் தொகை 83.3 ஆக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டத்தின் அடிப்படையில் பிரதமரின் கூற்று முற்றிலும் வித்தியாசமானதாக பாராளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கடன் தவணை மற்றும் வட்டி செலுத்தல் என்பன தமது ஆட்சிக் காலத்திலேயே அரச வருமானத்திற்கு மேலாக அதிகம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015, 2016, 2017ஆம் ஆண்டுகளில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. இந்த அரசாங்கத்திற்கு அல்ல 2020இல் வரும் அரசாங்கத்திற்கே இதனால் பிரச்சினை உருவாகும் என்றும், அரசாங்கத்திலுள்ள சூத்திரதாரிகள் மிகவும் சூட்சுமமாக ஜனாதிபதியையும் பிரதமரையும் சூழ்ச்சிக்குட்படுத்தி மிகவும் பிழையான தரவுகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2016இல் கல்வியமைச்சிற்கு ஒதுக்கிய நிதியில் 32 வீதமே வழங்கப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி அதாவது 20 வீதம் செலவாகவில்லை. அதன் பெறுமதி 792 பில்லியன் ரூபா எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு