குப்பைமேடு சரிந்தமையால் சிவனொளிபாதமலை பாதை சேதம்

நல்லத்தண்ணி சிவனொளிபாதமலைப் பகுதியில் இருந்த குப்பைமேடு சரிந்தமையால் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பாதை சேதமாகியுள்ளது.

சிவனொளிபாதமலையின் மாகிரிதம்ப எனும் பகுதியிலேயே நேற்று மதியம் குப்பை மேடு சரிந்துள்ளது. பருவகாலத்தில் மலை உச்சிக்கு செல்லும் யாத்திரிகளினால் வீசப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் உட்பட கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மேடே இவ்வாறு சரிந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகளை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும், உடனடியாத அக்கழிவுகளை அகற்ற நடடிக்கை எடுப்பதாகவும் சிவனொளிபதமலை நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் குப்பைமேடு சரிவினால் மலை உச்சிக்கு செல்லும் நடைபாதை சேதமானதுடன் பாதையோரமிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியும் சேதமடைந்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு