வானிலிருந்து வீழ்ந்த மர்மப்பொருள்

விண்கல் ஒன்றின் பாகமெனக் கருதப்படும் மர்ம பொருள் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் நேற்று இரவு வீழ்ந்துள்ளதாக ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புவியின் வளிமண்டலத்தில் எதிர்பாராத விதமாக நுழைந்த விண்கல்லின் பகுதியே அங்கு வீழ்ந்துள்ளதாகவும், குறித்த எரிகல்லை பொது மக்கள் தொட முயற்சிக்க வேண்டாம் எனவும் அது பற்றி தகவல் தெரிவிக்க 0714800800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்குமாறும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒரு மர்மப் பொருள் வானில் இருந்து வீழ்வதை பொதுமக்கள் அவதானித்துள்ளதாகவும், விண்ணில் இருந்து ஏதேனும் ஒரு பொருள் விழும் போது வெளிச்சம் மற்றும் சத்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு