தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று (18) அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரஸ்தாப தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றிய இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணத்திலும் ஏனைய சில மாவட்டங்களிலும் கொழும்பிலும் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருவதுடன், கட்சியின் மேல்மட்ட முக்கியஸ்தர்களுடன் மந்திராலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு