பிரதமர் நாளை விஷேட உரை

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக நாளை நாடாளுமன்றத்தில் விஷேட உரையாற்றவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சால் முன்னெடுக்கப்படும் உடகம கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான, அசோகபுரவின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், முதலீட்டாளர்களை கவர்வதற்கும் கிராமிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கும் அரசாங்கம் எவ்வாறு திட்டமிடுகிறது என்பதை நாட்டுக்கு அறிவிக்கவுள்ளதாகவும், உயர் கடன் நிலைமையை, 2018ஆம் ஆண்டு எவ்வாறு தாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை, நிதியமைச்சர் மங்கள சமரவீர, தனது பாதீட்டு உரையில், நவம்பர் 9, 2017இல் தெரிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் கடனை முகாமைத்துவம் செய்வது தொடர்பாகவே அரசாங்கம், 2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டிலும் 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டிலும் கவனம் செலுத்துமெனத் தெரிவித்துள்ளதுடன், அடுத்த 02 ஆண்டுகளில் 03 ட்ரில்லியன் ரூபாயை, கடனாக மீளச்செலுத்த வேண்டியுள்ளமையே இதற்கான காரணமாகும். இந்த அரசாங்கம், அதன் காலத்தில் இவற்றைச் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது தொடர்பாகவும், அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும், தேங்காய் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அதிகரித்துள்ள நிலையில், இந்த விலைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு