ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தயார்?

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை தயாரிக்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

17 விசாரணை அறிக்கைகளை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ள அதேவேளை, பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், அறிக்கைகளை தயாரிப்பதற்காக மேலுத் இரண்டு மாதகால அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்தக் கால எல்லை எதிர்வரும் மாதம் முதலாவது வாரத்துடன் நிறைவடையவுள்ளதாகவும், இந்தக் காலப் பகுதிக்குள் அனைத்து விசாரணை அறிக்கைகளையும் இறுதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது வரை இந்த ஆணைக்குழுவால் விசாரிக்கப்பட்ட சம்பவங்களின் 17 அறிக்கைகள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது தயாரிக்கப்பட்டுவரும் 17 அறிக்கைகளுடன் சேர்த்து ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு