நாட்டில் இரண்டு சட்டங்களா?

நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக பரவும் செய்தியில் உண்மையில்லையென பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று மாலை தலதா மாளிகைக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

சிலர் பார்க்கும் விதம் மற்றும் வரைவிலக்கணப்படும் விதம் காரணமாக இதுபோன்ற தவறான கருத்துக்கள் சமூக மயப்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன், தற்போது நாட்டில் இருப்பது ஒரு சட்டமே என்றும், அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு