மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று நேற்று இரவு வவுனியா பண்டாரிக்குளம் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நுழைந்து இரண்டு பேர் மீது வாள் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வவுனியா காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 7.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த குழுவினர் வர்த்தக நிலையத்திற்கு கடும் சேதம் விளைவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாள்களுடன் வந்த ஆறு பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், வவுனியா, கற்பகபுரம் பிரதேசத்தில் இரண்டு குழுக்கள் இடையே இடம்பெற்ற மோதலில் 04 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதலில் வெட்டு காயங்களுக்கு உள்ளானவர்கள், வவுனியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான தரப்பினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.