கிளிநொச்சியில் மலேரியா நுளம்பு

கிளிநொச்சியில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேரியா தடுப்பு இயக்கத்தின் கிளிநொச்சி பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராசா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்த நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி திருநகர் வடக்கு பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் இவ்வகை புதிய நுளம்பு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்து மக்கள் அஞ்ச வேண்டியதில்லை என்றும், பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள அரச மருத்துவமனைக்கு சென்று மலேரியா இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு