ரயனுக்கு தொடர் விளக்கமறியல்

மருத்துவபீட மாணவ செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று மாலிகாகந்த மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி சுகாதார அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு பிணை வழங்குமாறு மருத்து பீட மாணவ செயற்பாட்டு குழு இணைப்பாளர் கொழும்பு மேல்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு