வகுப்புப் பகிஷ்கரிப்பிற்கு தயாராகும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

ஜனாதிபதி சாதகமான பதில் தரும்வரை வகுப்பு பகிஷ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற போது, பல்கலைக்கழக அனைத்துபீட மாணவர்கள் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடிய போது, எதிர்வரும் புதன்கிழமைக்குள் சாதகமான பதில் தருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கலந்துரையாடலின் போது ஜனாதிபதியின் பதில்கள் திருப்தியளிக்கவில்லையெனக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தமக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும், அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கும் மாணவர்கள் என்ற ரீதியில் தலையிட வேண்டிய தேவை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உள்ளதென்றும், ஜனாதிபதியின் பதில்கள் திருப்தியாக அமையாவிடின் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு