மறைமாவட்ட குருக்களுக்கான ஓய்வு விடுதி திறப்பு (Photos)

வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ் மறைமாவட்ட குருக்களுக்கான ஒய்வு விடுதி இன்று (20) மறைமாவட்ட ஆஜர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மறை மாவட்ட ஆஜர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு கடற்படை தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுற்கிணங்க ஆயர் இல்லம் கடற்படைவீரர்களின் பொறியியல் பிரிவினரின் மனிதவலுவுடன் கட்டப்பட்டிருந்தது.

15 மில்லியன் ரூபா நிதியில் சேர் சிற்றம்பலம் கார்டினரின் நிதியத்தின் ஊடாக ஆரம்ப காலப்பகுதியில் 15 பரப்பு காணியில் குறித்த ஆயர்களுக்கான ஒய்வு விடுதி வளலாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. 1950ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் பாவனையில் இருந்தது. ஆயருக்கும் சிறப்பாக பெரிய குருமட அருள்சகோதரர்களும் தங்களுக்கு உரிய ஒய்வு விடுமுறை காலங்களில் இங்கு தங்கி செல்லவும் நற்கருணை வழிபாடுகளின் தங்கும் வசதி கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக, ஜெரோம் இமிலியான்பிள்ளை ஆண்டகை ஆயர் மிகவும் அதிகமாக தங்கி சென்ற இடமாக மேற்படி இடம் காணப்பட்டது. கொழும்பு அக்குவனஸ் பல்கலைகழகத்தினை ஆரம்பித்த இமிலியான்பிள்ளை ஆண்டகையின் சகோதரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், வடக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த.டி.சில்வா ரூபவ் கடற்படை அதிகாரிகள் மற்றும் பங்குத் தந்ததைகள் என பலர் கலந்து கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு