யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி (Photos)

பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் ஓராண்டு நினைவுதினம் இன்று பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைககழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களான சுலக்சன், கஜன் ஆகிய இரு மாணவர்களும் கடந்த 20.10.2016 அன்று பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களின் ஓராண்டு நினைவு தினம் இன்று காலை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மாணவர்கள் விரிவுரையாளர்கள் பேராசிரியர்களென அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு