வித்தியா படுகொலை வழக்கு; பொலிசாருக்கு பணப்பரிசு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் இன்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஏ.திசரா, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கும் 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு