வடக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

வடக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று, கிளிநொச்சி மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. 80 மில்லியன் ருபா செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 2018 ஜுலை மாதம் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதில் 15 வயதிலிருந்து 38 வயதுவரையுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. பயிற்சிகளின் போது அவர்களுக்கான உணவு, உடை, தங்குமிட வசதி மற்றும் ஊக்குவிப்பு தொகை என்பன வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் அவர்கள் தொழில் ரீதியில் சிறந்த நன்மைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.