யாழில் வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு (Photos)

வடமாகாண முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான வக்ப் சட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கு வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

பள்ளிவாசல் நிர்வாகச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் தொடர்பாக கருத்துரைகளை வளங்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்.எம்.எச்.நூருல் அமீன் வளவாளராக கலந்து கொண்டதுடன், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு