கல்வித்துறையில் பட்டதாரிகள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்படுவர்

எதிர்காலத்தில் கல்வி துறையில், பட்டதாரிகள் அல்லது டிப்ளோமா கற்கைநெறியினை பூர்த்தி செய்தவர்களை தவிர வேறு எவரும் இணைத்து கொள்ளப்படமாட்டார்களென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிகளை பூர்த்தி செய்து வெளியேறிய டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு