மக்களை கடனிலிருந்து விடுவிப்போம் – ஜனாதிபதி

மக்களை கடன் அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை 2018ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததுடன், தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக்கொண்டதன் காரணமாக கிராம மக்கள் அதிக அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படுவதுடன், செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கு வளங்களைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கையிலிருந்து விலகி, பொருளாதார பிரச்சினைகளுடைய மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான வசதிகளையும், வரப்பிரசாதங்களையும் வழங்குதல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு