அடுத்தவார முடிவுடன் சைட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும்

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் எடுக்கவுள்ள தீர்மானம் அதனை தடை செய்வதாகவே அமைய வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளதுடன், சைட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்டும் வேறு எந்த தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சைட்டம் தொடர்பில் அடுத்த வாரமளவில் தீர்வு ஒன்று பெற்று கொடுக்கப்படுமென ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு