வவுனியாவில் ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம்

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவையின் மூன்றாவது நடாமடும் சேவை இன்று வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்துகொண்டிருந்த நிலையில், நிகழ்வில் 5,000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் 1,000 பேருக்கும் சுயதொழில் உதவிகளும், இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படுகின்றன.

அத்துடன், காணிப்பிரச்சினை, ஆள் அடையாள அட்டை, பிறப்பு – இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் அங்கு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு