புதிய அரசியலமைப்பு ஆபத்தானது

புதிய அரசியல் அமைப்பு ஊடக தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து ஏற்படுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஹரித்த அலுத்கே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், புதிய அரசியலமைப்பின் ஊடக மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள், மாகாணங்களுக்கு பகிரப்படுகிறது. இதனால் தேசிய கொள்கையின்கீழ் உள்ள சிகிச்சை பணிகள் பாதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு பாதிப்புக்கான கொள்கைகள்கூட இதனால் பாதிக்கப்படும் எனவும், ஏற்கனவே இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள போலியோ மலேரியா போன்ற நோய்களும் மீண்டும் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு