04 வயது சிறுமியின் கலாட்ட திருமணம்

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 04 வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் 29 வயது ஆணுடன் நடந்த விளையாட்டு திருமணம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இந்த சிறுமியின் மாமாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இதை கண்ட அந்த சிறுமி தனக்கும் இதேபோல் திருமணம் செய்யவும், தனக்கும் ஒரு காதலன் வேண்டும் என்றும் ஆசைப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அச்சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த அல்பானி மெடிக்கல் சென்டரில் பணியாற்றிவரும் 29 வயதுடைய செவிலியர் அந்த சிறுமி மீது அதிக அன்பு செலுத்தி வந்த நிலையில், இந்த சிறுமியின் ஆசையை ஏற்றுக்கொண்ட செவிலியர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி சிறுமிக்கும் இளைஞனுக்கும் அந்த மருத்துவமனையிலேயே நடந்த கலாட்டா திருமணம் விளையாட்டாக இருந்தாலும் பார்ப்பவர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது. மேலும் மிட்டாய் மோதிரங்களை ஒருவருக்கொருவர் அணிந்து கேக் வெட்டி ஊட்டிக்கொண்டனர்.

முன்பெல்லாம் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த சிறுமி குறித்த நிகழ்விற்கு பின்னர் தனது ஆசை கணவனை பார்ப்பதற்காகவே ஆர்வமாக வருகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுமி தனது நோயிலிருந்து படிப்படியாக முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு