04 இந்தியர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ள அதேவேளை, குறித்த மீனவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் உதவி கடற்றொழில் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு