கிளிநொச்சியில் கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி, தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 13 கிலோவும் 730 கிராம் கேரளா கஞ்சா பொதி பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்னவின் கீழ் விஷேட மது ஒழிப்பு பிரிவினரின் தேடுதலில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு