சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் பணிகளை முடக்கும் முகமாகவும், அச்சுறுத்தும் முகமாகவும் கொழும்பு பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுப்படுமென பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் தன்னை எச்சரித்து அனுப்பியதாகவும் சிவகரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை விசாரணைக்கு வருகை தருமாறு கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் நேற்று விசாரனைக்காக சென்றிருந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கும் நிலையில், எதற்காக நீ போராட்டங்களை ஏற்பாடு செய்கின்றாய் என பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் தன்னிடம் வினவியதாக சிவகரன் மேலும் தெரிவித்துள்ளார்.