துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞர் உயிரிழந்துவிட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞரின் உயிரிழப்பு தொடர்பில் அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறலாமென வைத்தியாலை முழுவதிலும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் விஷேட அதிரப்படை மற்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞரின் நண்பரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணையின் போது, பொலிஸார் தான் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாகவும், தன்னால் அடையாளம் காட்ட முடியுமென்றும் நண்பர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு