பாலம் ஒன்றை சீரமமைக்கும் நடவடிக்கை காரணமாக இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை 05 நாட்கள், வடக்கு வடக்கு சேவையின் நாவற்குழி மற்றும் யாழ்ப்பாணம் வரையான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் கொழும்பில் இருந்து நாவற்குழி வரை மாத்திரமே ரயில் சேவை இடம்பெறுமென ரயில் கண்காணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.