தொடர்ந்தும் மூடப்பட்டுள்ள கலைப்பீடம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை மேலும் ஒரு வாரங்கள் வரை மூடவேண்டி ஏற்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பீடம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேவேளை, இந்த விடயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, அப்பல்கலையின் உபவேந்தர் லக்ஷ்மன் திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இது குறித்து கலந்துரையாட, நிர்வாக சபைக்கு உபவேந்தரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது, கலைப் பீடத்தை மீளத்திறப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு