யாழ். மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி

யாழ். கொக்குவிலில் மீண்டும் வாள்வெட்டுக் குழு நேற்றிரவு அட்டகாசத்தில் ஈடுபட்டமையினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பிறவுண் வீதிக்கு கூரிய வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மீது பெற்றோல் குண்டினை வீசிவிட்டு வர்த்தக நிலையத்திற்குள் உட்புகுந்துள்ளனர்.

இதன்போது குறித்த குழுவினர் மேற்படி வர்த்தக நிலைய உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ். கொக்குவில் பகுதியில் அண்மைக் காலமாக வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொலிஸார் குறித்த சம்பவங்களைக் கண்டும் காணாமலும் காணப்படுவது தொடர்பில் அப்பகுதிப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு