அரச வருமானம் வட்டி செலுத்தவே செலவாகிறது – சம்பிக்க

கடந்த தசாப்தத்தின்போது, அரச வருமானத்தில் 90 சதவீதமான அளவு, கடன் தவணைக் கட்டணங்களையும் அவற்றுக்கான வட்டிகளையும் செலுத்தவே செலவாகின்றதென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 79.3 சதவீதமான அளவாக, நாட்டின் கடன் பொறுப்பாகவுள்ளதெனத் தெரிவித்ததுடன், 2017ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி, அரச வருமானச் சமநிலையில், 193 நாடுகளில் 143ஆவது இடத்தில் இலங்கை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரச வருமானத்தினதும் செலவினதும் அடிப்படையில், இலங்கை கீழ்நிலையிலேயே காணப்படுவதாகவும், கடன்களைச் செலுத்துவதன் அடிப்படையில் பார்க்கும் போது, 95 நாடுகளில் 91ஆவது இடத்திலேயே இலங்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை, தற்போது நெருக்கடியான பொருளாதார நிலையில் காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், இலங்கையின் முதலீடுகளை, கவனமாக முகாமை செய்ய வேண்டிய நிலையுள்ளது எனவும், இல்லாவிடின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு