சீனாவிடம் கடனாளியானால் இலங்கை போன்று சிக்க வேண்டும்

சீனாவிடமிருந்து கடன்களை வாங்கினால், இலங்கையைப் போன்று கடனுக்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்படுமென, பிலிப்பைன்ஸ் உப ஜனாதிபதிகளுள் ஒருவரான லெனி றொப்ரெடோ எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் அரசாங்கம், சீனாவிடமிருந்து கடனைப் பெற்று, அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அண்மையில், 171 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ (சுமார் 291 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) மதிப்பிலான ரயில் கட்டமைப்பொன்றின் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும், முதலில், இது கடனாகும். மிகப்பெரிய 171 பில்லியன் பிலிப்பைன்ஸ் பெசோ அளவிலான கடன். அது, மிகப்பெரியது. இலங்கையால் அனுபவிக்கப்படுவது போன்று, மிகப்பெரிய கடன் பிடிக்குள் தாம் சிக்கிவிடுவோமோ என்பது தான், தமது அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் கடன் வாங்குவதற்கு தான் முழுமையாக எதிர்ப்பாக இல்லாவிட்டாலும், அபிவிருத்தித் திட்டங்களுக்காக, தொடர்ந்தும் கடனைப் பெறுவதைவிட, வேறு வழிகள் குறித்துச் சிந்திக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு