இடைக்கால வரைவு அறிக்கை வாபஸ் பெறப்பட வேண்டும்

அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக, வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கை, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டுமென கோட்டே ஸ்ரீகல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.

புதிய அரசமைப்பை வரைவதற்கு பொருத்தமான நேரம் இதுவன்று என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக கோட்டே ஸ்ரீகல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் அநுநாயக்க (இரண்டாம் நிலைத் தலைவர்) பேராசிரியர் வண. பெலன்வில விமலரத்ன தேரர், நேற்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, நாட்டின் பாதுகாப்பு, பௌத்தம் ஆகியன தொடர்பில், இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டால், பாரதூரமான விடயங்கள் ஏற்படும் என்பதால், புதிய அரசமைப்புத் தொடர்பான முன்மொழிவுகள், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ள தேரர், தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின், அவை பின்னர் செய்துகொள்ளப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு